மலேசிய விமான நிலையத்தில் நயன்தாராவுக்கு ஏற்பட்ட சிக்கல்



தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 பட உலகிலும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். காதல் சர்ச்சைகளில் சிக்கியபோதும் ‘மார்க்கெட்’ சரியவில்லை. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான்’ படங்களின் தொடர்வெற்றியால் மார்க்கெட் அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.

நயன்தாரா என்றாலே சர்ச்சைதான். மலேசியா சென்றிருந்த நயன்தாராவிடம், பாஸ்போர்ட்  தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 "இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாரா மலேசியா வந்தபோது அவரது பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும், அவரது டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருந்ததால் அவரை மலேசிய விமான நிலைய காவலர்கள் சிறிது நேரம் விசாரித்து விட்டு அனுப்பி விட்டார்கள். அந்த போட்டோக்கள்தான் தற்போது இணையதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் விக்ரம் நடிக்கும் இரு முகன் படத்தின் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அதில் நயன்தாரா ரகசிய ஏஜெண்டாக வருவார். அந்த காட்சியும் மலேசிய விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அந்த போட்டாவாக கூட இருக்கலாம். ஆனால் அவரின் பாஸ்போர்ட் பெயரும், டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம். அதனால் உயர் அதிகாரியின் சீல் வைக்கவில்லை என்பதால் அவரிடம் விசாரணை நடந்தது. அந்த போட்டோக்கள்தான் இப்போது வைரலாக வருகிறது. இதெல்லாம் நயனுக்கு புதியது இல்லை" என்றார்.

நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். ஆனால், படத்துக்காக தனது பெயரை நயன்தாரா என்று மாற்றினார். இந்நிலையில், மலேசியா சென்ற நயன்தாராவிடம், பாஸ்போர்ட்டில் இருந்த பெயர் குறித்து விசாரணை நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

பாஸ்போர்ட்டில், குரியன் நயன்தாரா என்றும், பிறந்த ஊர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்றும் இருக்கிறது. ஆனால் நயன்தாராவின் சொந்த ஊர் கேரளா. ஆனால் இந்த போட்டோ படத்துக்காக எடுக்கப்பட்டதாக என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இப்படிதான் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா ஒரு மதுக்கடைக்கு சென்று மது பாட்டில் வாங்குவது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.அந்த புகைப்படம் முன்னதாகவே  சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிட தக்கது.